கொள்ளைபோன தாது மணல் எவ்வளவு? 'இஸ்ரோ' உதவியுடன் சி.பி.ஐ., அளவீடு

சென்னை: தாது மணல் கொள்ளை நடந்த இடங்களின் பரப்பளவு, எத்தனை டன் அள்ளப்பட்டது என்பது குறித்து, 'இஸ்ரோ' விஞ்ஞானிகள் உதவியுடன், துல்லியமாக அளவீடு செய்ய உள்ளதாக, சி.பி.ஐ., அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருநெல்வேலி, துாத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களின் கடலோரப் பகுதிகளில், இயற்கை வளமான தாது மணல் கொள்ளை நடந்துள்ளது. அதிலிருந்து, 'தோரியம், கார்னைட்' உள்ளிட்ட கனிமங்கள் பிரித்து எடுக்கப்பட்டு, வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்டு உள்ளன.
இதுகுறித்து, சென்னை உயர் நீதிமன்ற உத்தரவின்படி, திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த, 'வி.வி.மினரல்ஸ்' உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள் மற்றும் 21 பேர் மீது, சி.பி.ஐ., அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
அவர்களின் வீடு, அலுவலகங்களில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களையும் பறிமுதல் செய்துள்ளனர். சி.பி.ஐ., அதிகாரிகள் கூறியதாவது: திருநெல்வேலியைச் சேர்ந்த வைகுண்டராஜனின் வி.வி.மினரல்ஸ் உள்ளிட்ட ஆறு நிறுவனங்கள், 579 ஏக்கர் பரப்பளவில், ஒரு கோடியே, ஒரு லட்சம் டன்னுக்கு மேலாக, தாது மணல் கொள்ளையில் ஈடுபட்டுள்ளதாக, எங்களுக்கு சில ஆவணங்கள் கிடைத்து உள்ளன.
இந்நிறுவனங்கள், 6,499 டன் 'மோனோசைட்' என்ற கனிமத்தை வெளிநாட்டுக்கு கடத்தி இருப்பதும் தெரியவந்துள்ளது. எங்களின் கள ஆய்வில், மாபியா கும்பல்கள் போல, தாது மணல் கொள்ளை நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில், மத்திய, மாநில அரசு அதிகாரிகள், அரசியல் கட்சிகளை சேர்ந்தோர் இருப்பதும் தெரியவந்துள்ளது. இது தொடர்பாக, நாங்கள் பதிவு செய்த வழக்கிலும் குறிப்பிட்டு உள்ளோம்.
தாது மணல் கொள்ளை நடந்த இடங்களின் பரப்பளவு மற்றும் எத்தனை டன் கனிமங்கள் கடத்தப்பட்டுள்ளன என்பது குறித்து, 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவன விஞ்ஞானிகள் உதவியுடன் அளவீடு செய்ய உள்ளோம். அதன் பின்னரே, கொள்ளை குறித்த முழு விபரம் தெரியவரும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
வாசகர் கருத்து (1)
naranam - ,
09 ஏப்,2025 - 15:05 Report Abuse

0
0
Reply
மேலும்
-
பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கடும் கண்டனம்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
Advertisement
Advertisement