தி.மு.க., இனிப்பு வழங்கல்

செஞ்சி : சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசுக்கு சாதகமாக தீர்ப்பு வழங்கியதால் செஞ்சியில் தி.மு.க.,வினர் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

சட்டசபையில் நிறைவேற்றப்படும் மசோதாக்களுக்கு கவர்னர் ஒப்புதல் தராமல் கால தாமதம் செய்வதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்த வழக்கில் தமிழக அரசுக்கு சாதகமாக நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இதையடுத்து செஞ்சி கூட்ரோட்டில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க., சார்பில் பட்டாசு வெடித்து பொது மக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ஒன்றிய சேர்மேன் விஜயகுமார், பேரூராட்சி சேர்மேன் மொக்தியார் ஆகியோர் தலைமை தாங்கினார்.

பொதுக்குழு உறுப்பினர் மணிவண்ணன், நகர செயலாளர் கார்த்திக், பொருளாளர் நெடுஞ்செழியன், துணைச் செயலாளர் செயல்மணி, அரசு வழக்கறிஞர் தமிழ்ச்செல்வி மற்றும் பேரூராட்சி கவுன்சிலர்கள் நகர நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Advertisement