கர்நாடகா பா.ஜ., போராட்டம் கிண்டல் அடித்த சிவகுமார்

''எரி பொருள் விலையை உயர்த்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், கர்நாடகாவில் பா.ஜ.,வினர் போராட்டம் நடத்துவது கேலி கூத்தாக உள்ளது,'' என துணை முதல்வர் சிவகுமார் கிண்டல் செய்தார்.
குஜராத் மாநிலம், ஆமதாபாதில் நடக்கும் காங்., தேசிய செயற்குழுவில் பங்கேற்பதற்காக நேற்று சென்ற துணை முதல்வர் சிவகுமார், அங்குள்ள விமான நிலையத்தில் அளித்த பேட்டி:
கட்சி அமைப்பில் ஒவ்வொன்றாக மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. தொண்டர்களின் கட்சியாக காங்கிரசை, மேலும் வளர்க்கும் பொறுப்பு, அனைவருக்கும் உள்ளது. அனைவரும் விவாதித்து ஒன்றிணைந்து செயல்பட, இக்கூட்டம் முன்னோடியாக இருக்கும்.
கடந்த வாரம் புதுடில்லியில் மாவட்ட அளவிலான தலைவர்கள் கூட்டம் நடந்தது. 1924ம் ஆண்டு மஹாத்மா காந்தி, காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்று, 100 ஆண்டுகள் ஆகின்றன. காந்திக்கு ஒற்றை தலைமையின் மீது நம்பிக்கை இல்லை. கூட்டு தலைமையை தான் நம்பினார்.
பா.ஜ.,வின் மக்கள் ஆக்ரோஷ யாத்திரையை வரவேற்கிறேன். இதன் மூலம், பெட்ரோல், டீசல், சமையல் காஸ் சிலிண்டர் விலையை உயர்த்தியதற்காக, மத்திய தேசிய ஜனநாயக கூட்டணி அரசை கண்டிக்காமல், கர்நாடக அரசை கண்டித்து போராட்டம் நடத்துவது கேலி கூத்தாக உள்ளது.
இவ்வாறு கூறினார்.
- நமது நிருபர் -
மேலும்
-
மே. வங்கத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு சற்று நிம்மதி: டிசம்பர் வரை பணியில் தொடர உச்சநீதிமன்றம் அனுமதி
-
டில்லி சென்றார் கவர்னர் ரவி
-
மீனவர் பிரச்னைக்கு தீர்வு தொடர்பாக பிரதமர் மோடியுடன் பேச்சு: இலங்கை அதிபர்
-
இரட்டை இலை சின்னம் விவகாரம்: ஏப்.,28 ல் தேர்தல் கமிஷன் விசாரணை
-
ஜனாதிபதிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவா: துணை ஜனாதிபதி எதிர்ப்பு
-
விசைத்தறியாளர்களுக்கு கூலி உயர்வு: உறுதி செய்ய தமிழக அரசுக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்