பங்குனி உற்ஸவம்

மதுரை: மதுரை தெற்குவாசல் பங்குனி உற்ஸவம் வைக்கோல்காரத் தெருவில் சவுடார்பட்டி காளியம்மன், மாரியம்மன், கருப்பணசாமி, குருநாத சுவாமி கோயில்களில் பங்குனி உற்ஸவம் 3 நாட்கள் நடந்தன. வைகை ஆற்றில் தீர்த்தம் எடுத்து கரகத்துடன் ஊர்வலமாக வந்தனர். மூன்று நாட்களிலும் பொங்கல் வைத்தும், பொங்கலுடன், விருந்தும் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை ஸ்ரீகிருஷ்ண விலாச பலிஜா சபா தலைவர் ராதாகிருஷ்ணன் முன்னிலையில் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Advertisement