இன்றைய நிகழ்ச்சிகள் /ஏப். 9 க்குரியது

கோயில்

பங்குனி திருக்கல்யாண உற்ஸவம்: -கள்ளழகர் கோயில், அழகர்கோவில், சுந்தரராஜப்பெருமாள், ஸ்ரீதேவி, பூமிதேவி திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளல், காலை 7:00 மணி முதல்.

பங்குனி உத்திர கல்யாண திருவிழா: வெங்கடாஜலபதி கோயில், அண்ணாநகர், மதுரை, -பத்மாவதி தாயார் மாக்காப்பு உற்ஸவம், சிறப்பு பூஜை: இரவு 7:00 மணி.

அகண்டநாமம்: நாமத்வார், இளங்கோ தெரு, அய்யர் பங்களா, மதுரை, மாலை 6:30 மணி.

பங்குனித் திருவிழா - மாவிளக்கு ஏற்றுதல்: துவராள்பதி அம்மன் கோயில், மணப்பட்டி, காலை 7:00 மணி.

பங்குனித் திருவிழா - முளைப்பாரி கரைத்தல்: கருப்பசாமி வஞ்சியம்மன் கோயில், காலை 8:00 மணி.

பகவான் வேதவியாசர் விழா: துர்கா இல்லம், 7, வியாசர் தெரு, பழனிமுத்து நகர், வில்லாபுரம், மதுரை, மாலை 6:00 மணி.

பக்தி சொற்பொழிவு

திருவருட்பா: நிகழ்த்துபவர் - - விசயராமன், மதுரைத் திருவள்ளுவர் கழகம், மீனாட்சி அம்மன் கோயில், வடக்காடி வீதி, மதுரை, இரவு 7:00 மணி.

சதஸ்லோகீ: நிகழ்த்துபவர் - கிருஷ்ணமூர்த்தி, வேதாந்த சிரவணானந்த ஆசிரமம், 4, கீழமாத்துார் பள்ளி வாசல் தெரு, கீழவாசல், மதுரை, மாலை 6:30 மணி.

பள்ளி, கல்லுாரி

135ம் ஆண்டு விளையாட்டு விழா: மதுரைக் கல்லுாரி, மதுரை, சிறப்பு விருந்தினர்: இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் வெங்கடரமணா, பங்கேற்பு: தலைவர் சீதாராமன், செயலாளர் நடனகோபால், துணைத் தலைவர் சங்கரன், இணைச் செயலாளர் பார்த்தசாரதி, தாளாளர் ஆன்ந்த் ஸ்ரீனிவாசன், மதியம் 3:00 மணி.

பொது

சமரச நாளை முன்னிட்டு விழிப்புணர்வு ஊர்வலம்: மாவட்ட நீதிமன்றம் - அரசு சட்டக்கல்லுாரி ரோடு, மதுரை, துவக்கி வைப்பவர்: மாவட்ட முதன்மை நீதிபதி சிவகடாட்சம், காலை 9:45 மணி.

மக்கள் குறைதீர் முகாம், அலைபேசி ஒப்படைக்கும் நிகழ்ச்சி: போலீஸ் கமிஷனர் அலுவலகம், மதுரை, பங்கேற்பு: கமிஷனர் லோகநாதன், காலை 10:00 மணி.

அம்பேத்கார் பிறந்தநாள் விழா: அரசு சட்டக் கல்லுாரி, மதுரை, தலைமை: முதல்வர் குமரன், சிறப்பு விருந்தினர்: உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி சுவாமிநாதன், ஏற்பாடு: சட்ட படிப்புகள் இயக்குனரகம், காலை 9:30 மணி.

பள்ளி மாணவர்களுக்கான உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி: தமுக்கம் மைதானம், மதுரை, பங்கேற்பு: மேயர் இந்திராணி பொன்வசந்த், கலெக்டர் சங்கீதா, மாநகராட்சி கமிஷனர் சித்ரா, ஏற்பாடு: மாநகராட்சி, தியாகராஜர் கல்லுாரி, காலை 9:00 மணி.

நாட்டுபுறப் பாடல்களில் சமூக வெளிப்பாடு - தமிழ்க்கூடல்: உலகத் தமிழ்ச் சங்கம், மதுரை, தலைமை: இயக்குனர் அவ்வை அருள், சிறப்பு விருந்தினர்: அன்னை பாத்திமா கல்லுாரி தமிழ்த்துறை தலைவர் முனியாண்டி, காலை 10:30 மணி.

அனுதினம் அன்னதானம்: தமிழ்நாடு மகா சவுராஷ்டிரா சபா, லட்சுமி நகர் 3வது தெரு, வண்டியூர், மதுரை, மதியம் 12:30 மணி.

மருத்துவம்

பொது மருத்துவ சிறப்பு ஆலோசனை முகாம்: தேவதாஸ் மருத்துவமனை, சர்வேயர் காலனி, மதுரை, மாலை 4:00 மணி முதல் இரவு 10:00 மணி வரை.

Advertisement