அமலாக்கத்துறை ரெய்டு, விசாரணை; அமைச்சர் நேருவின் சகோதரர் மருத்துவமனையில் அனுமதி

சென்னை: தமிழக அமைச்சர் கே.என்.நேரு சகோதரர் ரவிச்சந்திரன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அமைச்சர் கே.என். நேரு மகனும், எம்.பி.,யுமான அருண் நேரு, நேருவின் சகோதரர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தொடர்புடைய 4 இடங்களில் அமலாக்கத்துறையினர் தீவிர சோதனை நடத்தினர். சென்னையில் உள்ள ரவிச்சந்திரன் வீட்டில் அவர்கள் நடத்திய சோதனை முடிந்துவிட்டது.
சோதனையின் போது முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக கூறப்படும் நிலையில், ரவிச்சந்திரனை அமலாக்கத்துறையினர் அலுவலகத்திற்கு அழைத்து விசாரணை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நெஞ்சுவலி, ரத்த அழுத்தத்தில் மாறுபாடு காரணமாக ரவிச்சந்திரன் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.
அங்கு அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் உள்ளார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
முன்னதாக, இன்று (ஏப்.11) அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராகுமாறு சம்மன் அனுப்பப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.








