செஸ்: வைஷாலி வெற்றி

புனே: 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடரின் ஐந்தாவது சுற்றில் இந்தியாவின் வைஷாலி வெற்றி பெற்றார்.
சர்வதேச செஸ் கூட்டமைப்பு ('பிடே') சார்பில் பெண்களுக்கான 'கிராண்ட் ப்ரி' செஸ் தொடர் நடத்தப்படுகிறது. ஐந்தாவது தொடர் புனேயில் நடக்கிறது.
நேற்று ஐந்தாவது சுற்று போட்டி நடந்தன. இந்தியாவின் வைஷாலி, மங்கோலியாவின் பக்குயாக்கை எதிர்கொண்டார். வெள்ளை நிற காய்களுடன் விளையாடினார் வைஷாலி. இதில் 52வது நகர்த்தலில் வைஷாலி வெற்றி பெற்றார்.
இந்திய வீராங்கனைகள் ஹரிகா, ஹம்பி விளையாடினர். ஹம்பி வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கினார். இப்போட்டி 19 வது நகர்த்தலில் 'டிரா' ஆனது. மற்றொரு போட்டியில் இந்தியாவின் திவ்யா, ரஷ்யாவின் போலினா மோதிய போட்டியும் 'டிரா' ஆனது.
ஐந்து சுற்று முடிவில் சீனாவின் ஜு ஜினெர் (4.0) முதலிடத்தில் தொடர்கிறார். இந்தியாவின் ஹம்பி (3.5), திவ்யா (3.5), வைஷாலி (2.5), ஹரிகா (2.5) அடுத்த நான்கு இடங்களில் உள்ளனர்.
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்