ஸ்குவாஷ்: அரையிறுதியில் அனாஹத்

கோலாலம்பூர்: அமெரிக்காவின் சிகாகோவில், வரும் மே 9-17ல் உலக ஸ்குவாஷ் சாம்பியன்ஷிப் தொடர் நடக்கிறது. இதற்கான ஆசிய தகுதிச் சுற்று, மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் நடக்கிறது. இதில் வெற்றி பெற்றால் உலக சாம்பியன்ஷிப்பில் பங்கேற்கலாம்.
பெண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில், இத்தொடரின் ஐந்தாம் நிலை வீராங்கனை, இந்தியாவின் அனாஹத் சிங் 17, ஜப்பானின் அகாரி மிடோரிகவா 19, மோதினர்.
இதில் அனாஹத் 3-0 (11-1, 11-7, 11-5) என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, அரையிறுதிக்குள் நுழைந்தார். இதில் ஹாங்காங்கின் ஹெலன் டங்கை சந்திக்க உள்ளார்.
மற்றொரு காலிறுதியில் இந்திய வீராங்கனை ஆகான்ஷா, 3-0 என (11-0, 11-3, 11-3) சிங்கப்பூரின் இயாங் யான்னை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.
ஆண்கள் ஒற்றையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் வீரர் சோட்ரானி, மலேசிய வீரர் முகமது சியாபிக் கமாலை சந்தித்தார். முதல் செட்டை 9-11 என இழந்த சோட்ரானி, பின் அடுத்த மூன்று செட்டையும் (11-6, 11-6, 11-7) கைப்பற்றினார். முடிவில் சோட்ரானி 3-1 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.
மேலும்
-
ஊக்க மருந்து ஊசிகளை விற்பனை செய்ய முயன்ற இருவர் கைது; ரூ. 10 லட்சம் மதிப்புள்ள மருந்துகள் பறிமுதல்.
-
மஹாத்மா காந்தி, நேருவிடம் கற்றுக் கொண்டது என்ன: ராகுல் பேட்டி
-
டில்லி வீரர்கள் அபாரம்; குஜராத்துக்கு 204 ரன்கள் இலக்கு
-
நக்சல்களின் 12 பதுங்கு குழிகள் அழிப்பு: சத்தீஸ்கரில் பாதுகாப்பு படை தீவிரம்
-
காசாவில் இஸ்ரேல் தொடர் தாக்குதல்; 48 மணி நேரத்தில் 90 பேர் பலி
-
பிரதமர் மோடியுடன் பேசியது கவுரவம்: எலான் மஸ்க் பெருமிதம்