தடகள பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்

தேனி : தேனி மாவட்ட விளையாட்டு அரங்கில் தடகளத்திற்கான ஸ்டார் அகாடமி அமைக்கப்பட உள்ளது.

அதில் 20 வீரர்கள், 20 வீராங்கனைகளுக்கு 25 நாட்கள் தொடர் பயிற்சி அளிக்கப்பட உள்ளது. பயிற்சியில் சிற்றுண்டி, பயிற்சி உபகரணங்கள், விளையாட்டு சீருடைகள் வழங்கப்பட உள்ளது. 12 வயது முதல் 21 வயதுடையவர்கள் ஏப்.,28ல் நடைபெறும் நேர்முக தேர்வில் பங்கேற்கலாம். பயிற்சி வழங்க தடகள பயிற்றுனர்கள் விண்ணப்பங்களை ஏப்.,20 மாலை 5:00 மணிக்குள் மாவட்ட விளையாட்டு அலுவலகத்தில் வழங்கலாம். அலுவலகத்தில் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் ரஞ்ஜீத்சிங் தெரிவித்துள்ளார்.

Advertisement