செல்வ கணபதி கோவிலில மஹாகும்பாபிஷேகம்

விடையூர்:கடம்பத்துார் ஒன்றியம் விடையூர் ஊராட்சியில் அமைந்துள்ளது செல்வ கணபதி கோவில். இந்த கோவில் வளாகத்தில் கந்தசாமி, கங்கையம்மன், ராதா ருக்மணி சமேத ஸ்ரீ கிருஷ்ணர் போன்ற கோவில்களும் உள்ளன.

இங்கு நேற்று மஹா கும்பாபிஷேகம் நடந்தது.

முன்னதாக கடந்த 14ம் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் கும்பாபிஷேக நிகழ்ச்சிகள் துவங்கின. பின் 15ம் தேதி கணபதி, லட்சுமி, நவக்கிர ஹோமம் நடந்தது.

மறுநாள் 16ம் தேதி, புதிய சிலைகளுக்கு கண் திறத்தல் பூஜை நடந்தது.

நேற்று காலை நான்காம் கால பூஜைக்கு பின், கும்பாபிஷேக கலசங்கள் புறப்பாடு நடந்தது. தொடர்ந்து கோபுர கலசம் புனித நீரால் மஹாகும்பாபிஷேகம் நடந்தது.

பின் செல்வ விநாயகர், கந்தசாமி, முருகர், கங்கையம்மன், ராதா ருக்மணி சமேத கிருஷ்ணர் ஆகிய கோவில்களுக்கும் மஹாகும்பாபிஷேகம் நடந்தது.

இதில், விடையூர் மற்றும் சுற்றியுள்ள கிராமங்களைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி அருள் பெற்றனர்.

Advertisement