வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் விஜய் வழக்கு

9

புதுடில்லி: மத்திய அரசு கொண்டு வந்துள்ள வக்ப் சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் த.வெ.க., தலைவர் விஜய் வழக்கு தொடர்ந்துள்ளார்.


பார்லிமென்டில் நிறைவேற்றப்பட்ட வக்ப் மசோதாவிற்கு ஜனாதிபதி ஒப்புதல் அளித்துள்ளார். இதனையடுத்து அந்த சட்டம் அமலுக்கு வந்துள்ளது. இச்சட்டத்திற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் காங்கிரஸ், ஏஐஎம்ஐஎம் உள்ளிட்ட கட்சிகள் சார்பில் வழக்கு தொடர்ந்து உள்ளது. தமிழக அரசு சார்பிலும் வழக்கு தொடரப்படும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

இந்நிலையில், இந்த சட்டத்திற்கு எதிராக த.வெ.க., தலைவர் விஜயும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

Advertisement