சிங்கப்பூரில் இந்திய வம்சாவளியினருக்கு அதிகரிக்கும் மவுசு; பொதுத்தேர்தலில் வாய்ப்பு அளிப்பேன் என்கிறார் பிரதமர் வோங்க்

6


சிங்கப்பூர்: ''மக்கள் செயல் கட்சி வரவிருக்கும்,பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினரை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கும்'' என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்க் உறுதி அளித்துள்ளார்.


சிங்கப்பூரில் 2020ம் ஆண்டு நடந்த பொதுத்தேர்தலில் மக்கள் செயல் கட்சி 83 இடங்களில் வெற்றி பெற்றது. இந்த கட்சியின் 27 புது முகங்களில் இந்திய வேட்பாளர்கள் இடம்பெறவில்லை. 2024ம் ஆண்டு தரவுகளின் படி சிங்கப்பூர் மக்கள் தொகையில் இந்தியர்கள் 7.6 சதவீதமும், மலாய் மக்கள் 15.1 சதவீதமும், சீனர்கள் 75.6 சதவீதமும் உள்ளனர். விரைவில் பொதுத்தேர்தல் நடைபெற உள்ளது.


மக்கள் செயல் கட்சி வரவிருக்கும், பொதுத்தேர்தலில் இந்திய வம்சாவளியினரை வேட்பாளர்களாக தேர்ந்தெடுக்கும் என சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங்க் உறுதி அளித்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது: சிங்கப்பூரில் வசிக்கும் இந்தியர்கள் வணிகம், தொழில் உட்பட பல துறைகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளனர்.



இந்திய வம்சாவளியினர் பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், பொதுத் தேர்தலில் உரிய வாய்ப்பு வழங்கப்படும். சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய வம்சாவளியினர் எண்ணிக்கை குறைவாக இருந்தாலும், அவர்களின் பங்களிப்பு பெரியது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement