லேசரில் செயல்படும் ட்ரோன் எதிர்ப்பு ஆயுதம் சோதனை வெற்றி: டி.ஆர்.டி.ஓ., விஞ்ஞானிகள் சாதனை

புதுடில்லி: டி.ஆர்.டி.ஓ. எனப்படும் இந்தியாவின் போர் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி நிறுவனம் வடிவமைத்த லேசர் அடிப்படையிலான ட்ரோன் எதிர்ப்பு ஆயுத சோதனை வெற்றிகரமாக நடந்தது.
டி.ஆர்.டி.ஓ., அதிகாரி கூறியதாவது: இந்த அதிநவீன அமைப்பு, விநாடிகளில் பறக்கும் ட்ரோன்களை துல்லியமாக அழிக்கும் திறன் கொண்டது. லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பு, சோதனை நடத்தியதில்,பல ட்ரோன்களை முறியடித்தது மற்றும் எதிரி கண்காணிப்பு சென்சார்களை அழித்தது.
இந்த அதிநவீன அமைப்பு மின்னல் வேகத்தில் துல்லியமாக சில நொடிகளுக்குள் இலக்கை தாக்கி அழித்தது.
லேசர் அடிப்படையிலான ஆயுத அமைப்பின் இந்த சோதனையால்,உயர் சக்தி லேசர்-டியூ தொழில்நுட்பத்தைக் கொண்ட அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா உள்ளிட்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக இணைந்துள்ளது.
உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட 30 கிலோவாட் எம்.கே -II(A) லேசர்-இயக்கப்பட்ட ஆயுதம் அமைப்பு, கர்னூலில் உள்ள பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு, உயர் ஆற்றல் அமைப்புகள் மற்றும் அறிவியல் மையம்,கல்வி நிறுவனங்கள் மற்றும் இந்திய தொழில்களுடன் இணைந்து வடிவமைத்து உருவாக்கப்பட்டது.இவ்வாறு டி.ஆர்.டி.ஓ., அதிகாரி கூறினார்




மேலும்
-
மத்திய -மாநில அரசு உறவு பற்றி ஆராய உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
பயம், அச்சம்... இல்லாமல் இருப்பதற்கு என்ன வழி?
-
நாங்க மாற முடியாது என எதிர்த்த ஹார்வர்ட் பல்கலை; நிதியை நிறுத்தி டிரம்ப் 'தடாலடி'
-
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
-
பீஹார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி., -காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்று துவக்கம்
-
பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி