பீஹார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி., -காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்று துவக்கம்

பாட்னா: பீஹார் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் டில்லியில் இன்று (ஏப்., 15) ஆலோசனை நடத்துகிறார்.
இந்த ஆண்டு இறுதியில் பீஹார் சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. தேர்தல் தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை. இப்போதே தேர்தல் பிரசாரங்கள் துவங்கி விட்டன. மஹாராஷ்டிரா, ஹரியானா, டில்லி மாநில தேர்தல்களில் வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் உள்ள பா.ஜ., பீஹாரில் தீவிரமாக களம் இறங்கியுள்ளது.
பிரபல தேர்தல் வியூக நிபுணர் பிரசாந்த் கிஷோரின் ஜன் சுராஜ் கட்சியும் களத்தில் உள்ளது. இண்டி கூட்டணியில் உள்ள ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவர் லாலுவோ, தன் மகன் தேஜஸ்வி யாதவ் முதல்வராக வேண்டும் என ஆசைப்படுகிறார். தொடர் தோல்வியை சந்தித்த காங்கிரசுக்கு அதிக தொகுதிகள் ஒதுக்க கூடாது என, லாலு கூறி வருகிறார்.
பீஹார் சட்டசபை தேர்தல் கூட்டணி குறித்து காங்கிரஸ் தலைமையுடன் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் தலைவர் தேஜஸ்வி யாதவ் டில்லியில் இன்று(ஏப்., 15) ஆலோசனை நடத்துகிறார். டில்லி விமான நிலையத்தில் லாலுவின் மகன் தேஜஸ்வி யாதவ் கூறியதாவது:
சட்டசபை தேர்தல் குறித்து இன்று காங்கிரஸ் கட்சியுடன் அதிகாரப்பூர்வ கூட்டம் நடக்கிறது.
தேர்தலுக்கான உத்திகள் குறித்து நாங்கள் விவாதிப்போம். இந்த கூட்டத்தில் வரவிருக்கும் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு மற்றும் இரு கட்சிகளுக்கும் இடையிலான கூட்டணி குறித்து விவாதிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


மேலும்
-
கூட்டு பாலியல் வன்கொடுமை; உ.பி., மாநிலத்தில் 14 பேர் கைது
-
காஷ்மீர் சிறப்பு சட்டத்தை நீக்க பரூக் அப்துல்லா ஆதரவா; உளவுத்துறை முன்னாள் தலைவர் பரபரப்பு தகவல்
-
நாங்குநேரி மாணவன் சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல்; மருத்துவமனையில் பதற்றம்
-
தி.மு.க., ஆட்சியை அகற்றுவது ஒன்றே தீர்வு; சீமான் ஆவேசம்
-
முன்கூட்டியே திட்டமிடப்பட்ட கலவரம்: மம்தா குற்றச்சாட்டு
-
சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது