வில்வித்தை: ஜோதி-ரிஷாப் 'தங்கம்'

புளோரிடா: உலக கோப்பை வில்வித்தையில் இந்தியாவின் ஜோதி, ரிஷாப் யாதவ் ஜோடி தங்கம் வென்றது.
அமெரிக்காவில் உலக கோப்பை வில்வித்தை ('ஸ்டேஜ் 1') தொடர் நடக்கிறது. கலப்பு இரட்டையர் 'காம்பவுண்டு' பிரிவு பைனலில் இந்தியாவின் ஜோதி சுரேகா, ரிஷாப் யாதவ் ஜோடி, சீனதைபேயின் ஹுவாங் ஐ-ஜோ, சீ-லுன் சென் ஜோடியை எதிர்கொண்டது. அபாரமாக ஆடிய இந்திய ஜோடி 153-151 (37-38, 38-39, 39-39, 39-36) என்ற கணக்கில் வெற்றி பெற்று தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.
இது, இத்தொடரில் இந்தியாவுக்கு கிடைத்த 2வது பதக்கம். ஏற்கனவே ஆண்கள் இரட்டையர் 'காம்பவுண்டு' பிரிவில் இந்தியாவின் அபிஷேக், ரிஷாப் யாதவ் ஜோடி வெண்கலம் வென்றிருந்தது.
ஆண்களுக்கான தனிநபர் 'காம்பவுண்டு' பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, மெக்சிகோவின் செபாஸ்டியன் கார்சியா மோதினர். விறுவிறுப்பான போட்டி 144-144 என சமன் ஆனது. பின் 'ஷூட் ஆப்' முறையில் ஏமாற்றிய அபிஷேக் 9-10 என தோல்வியடைந்தார். அடுத்து நடந்த வெண்கலப் பதக்கத்துக்கான போட்டியில் அபிஷேக் 141-145 என சீனதைபேயின் சீ-லுன் சென்னிடம் வீழ்ந்தார்.
மேலும்
-
பயம், அச்சம்... இல்லாமல் இருப்பதற்கு என்ன வழி?
-
நாங்க மாற முடியாது என எதிர்த்த ஹார்வர்ட் பல்கலை; நிதியை நிறுத்தி டிரம்ப் 'தடாலடி'
-
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
-
பீஹார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி., -காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்று துவக்கம்
-
பிரியங்கா கணவர் ராபர்ட் வாத்ராவுக்கு நெருக்கடி
-
ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடியின் கட்சி பதவி பறிப்பு; பகுஜன் சமாஜ் கட்சி அறிவிப்பு