ஜெர்மனி நீச்சல் வீரர் சாதனை: 'பிரீஸ்டைல்' 400 மீ., போட்டியில்

ஸ்டாக்ஹோம்: நீச்சல் போட்டியில் ஜெர்மனியின் மார்டென்ஸ் ('பிரீஸ்டைல்' 400 மீ.,) உலக சாதனை படைத்தார்.
சுவீடனில், 'சுவிம் ஓபன் ஸ்டாக்ஹோம்' நீச்சல் தொடர் நடந்தது. ஆண்களுக்கான 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் ஜெர்மனியின் லுாகாஸ் மார்டென்ஸ், பந்தய துாரத்தை 3 நிமிடம், 39.96 வினாடியில் கடந்தார். இதனையடுத்து 400 மீ., 'பிரீஸ்டைல்' பிரிவில் இலக்கை குறைந்த நேரத்தில் கடந்து உலக சாதனை படைத்தார். இதற்கு முன் 2009ல் இத்தாலியில் நடந்த உலக சாம்பியன்ஷிப் போட்டியில் ஜெர்மனியின் பால் பைடர்மேன், பந்தய துாரத்தை 3 நிமிடம், 40.07 வினாடியில் கடந்து உலக சாதனை படைத்திருந்தார்.
மார்டென்ஸ் 23, பாரிஸ் ஒலிம்பிக் 'பிரீஸ்டைல்' 400 மீ., போட்டியில் (3 நிமிடம், 41.78 வினாடி) தங்கம் வென்றிருந்தார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்: நெல்லை பள்ளியில் அதிர்ச்சி
-
மத்திய -மாநில அரசு உறவு பற்றி ஆராய உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
-
பயம், அச்சம்... இல்லாமல் இருப்பதற்கு என்ன வழி?
-
நாங்க மாற முடியாது என எதிர்த்த ஹார்வர்ட் பல்கலை; நிதியை நிறுத்தி டிரம்ப் 'தடாலடி'
-
சத்குருவின் தமிழ் புத்தாண்டு வாழ்த்து!
-
பீஹார் சட்டசபை தேர்தல்: ஆர்.ஜே.டி., -காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சு இன்று துவக்கம்
Advertisement
Advertisement