வளசரவாக்கத்தில் சாலை பள்ளம் வாகன ஓட்டிகள் அவதி

வளசரவாக்கம்:வளசரவாக்கம் மண்டலம் 152 வது வார்டில் கைகான்குப்பம் வா.உ.சி., தெரு அமைந்துள்ளது. இது வளசரவாக்கம் மற்றும் ராமாபுரம் பகுதிகளை இணைக்கும் சாலையாக உள்ளது. மாநில நெடுஞ்சாலை துறை பராமரிப்பில் இருந்த இச்சாலை தற்போது, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
நெடுஞ்சாலை துறை சார்பில் இச்சாலையில் 20 கோடி ரூபாய்க்கு மழைநீர் வடிகால் அமைக்கப்பட்டு, 1.5 கோடி ரூபாய் மதிப்பில் தார் சாலை அமைக்கப்பட்டது.
சேவை துறைகள் பணியால் சாலையில் தொடர்ந்து பள்ளங்கள் தோண்டப்பட்டு, சாலை கரடு முரடாக மாறி உள்ளது.
தற்போது, இச்சாலை உள்வாங்கி, சிறிய பள்ளம் ஏற்பட்டுள்ளது. பள்ளம் ஏற்பட்டு பல நாட்கள் ஆகியும் சீர் செய்யப்பட வில்லை. எனவே, பள்ளத்தை சீர் செய்ய வேண்டும் என, அப்பகுதியினர் கோரிக்கை எழுந்துள்ளது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூருவில் நடுரோட்டில் அப்படியே கவிழ்ந்த தண்ணீர் லாரி; பகீர் கிளப்பிய வீடியோ
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
-
மே 2ல் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
-
ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் மேல் நடவடிக்கை: அனுமதி வழங்கினார் கவர்னர்!
-
மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்: நெல்லை பள்ளியில் அதிர்ச்சி
-
மத்திய -மாநில அரசு உறவு பற்றி ஆராய உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement