அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்

ஜம்மு; அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடங்கி உள்ளது. நீண்ட வரிசையில் யாத்ரீகர்கள் காத்திருந்து முன்பதிவு செய்து வருகின்றனர்.
ஜம்மு காஷ்மீரில் உள்ள அமர்நாத் குகைக் கோவில் பனிலிங்கத்தை தரிசிக்க ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். பனியால் உருவாகும் சிவலிங்கமே அதன் சிறப்பு என்பதே காரணம்.
இந் நிலையில் அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு இன்று (ஏப்.15) தொடங்கி உள்ளது. யாத்திரையில் கலந்து கொள்ள ஆர்வம் கொண்ட பலரும், நீண்ட வரிசையில் நின்று பெயரை பதிவு செய்து வருகின்றனர்.
முன்பதிவுக்கு வந்திருந்த யாத்ரீகர் சோனியா மெஹ்ரா என்பவர் கூறுகையில். அமர்நாத் யாத்திரை செல்ல நான் ஆர்வமுடன் காத்திருக்கிறேன். இப்போது இரண்டாவது முறையாக யாத்திரை செல்கிறேன் என்றார்.
ரோகித் என்ற யாத்ரீகர் கூறுகையில், யாத்திரை செல்ல முன்பதிவு செய்ய வந்துள்ளவர்கள் மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டும் என்று கூறி உள்ளனர் என்றார்.
இந்தாண்டு அமர்நாத் யாத்திரை ஜூவை 3ம் தேதி தொடங்குகிறது. பாகல்ஹாம், பல்டால் ஆகிய இரு வழிகளிலும் ஒருசேர யாத்திரை தொடங்க உள்ளது. ஆக.9ம் தேதி யாத்திரை நிறைவடைகிறது.
மேலும்
-
சிவில் பிரச்னைக்கு கிரிமினல் வழக்கு உ.பி., போலீசுக்கு சுப்ரீம் கோர்ட் அபராதம்
-
காங்., அரசை கவிழ்க்க மத்திய அரசு... சதி? சித்து, சிவகுமாருக்கு கார்கே எச்சரிக்கை
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்