பெங்களூருவில் நடுரோட்டில் அப்படியே கவிழ்ந்த தண்ணீர் லாரி; பகீர் கிளப்பிய வீடியோ

பெங்களூரு: பெங்களூரு அருகே முந்திச் செல்ல முயன்ற போது நடுரோட்டில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோ வெளியாகி உள்ளது.
இதுபற்றிய விவரம் வருமாறு;
வர்தூர் பகுதியில் இருந்து தொம்மசந்திராவுக்கு தண்ணீர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. தொம்மசந்திராவை அடைய இன்னும் 8 கிலோ மீட்டர் மட்டுமே இருந்தது. பரபரப்பான சாலையில் சென்று கொண்டிருந்த லாரி, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்தது.
அசுர வேகத்தில் நிலைதடுமாறி முன்னால் சென்று கொண்டிருந்த மற்றொரு லாரியை இடது பக்கம் முந்திச் செல்ல முயன்றது. அடுத்த விநாடி நடுரோட்டில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. லாரியில் தண்ணீர் நிரம்பி இருந்ததால், சாலையில் கொட்டி அந்த இடமே வெள்ளக்காடானது.
விபத்தில் லாரி ஓட்டுநரும், உள்ளே இருந்த ஒருவரும் படுகாயம் அடைந்தனர். அவர்கள் இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்தின் காட்சிகள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனம் ஒன்றின் பின்னால் பொருத்தப்பட்டு இருந்த கேமராவில் தெளிவாக பதிவாகி இணையத்திலும் வைரலாகி உள்ளது.



மேலும்
-
காங்., அரசை கவிழ்க்க மத்திய அரசு... சதி? சித்து, சிவகுமாருக்கு கார்கே எச்சரிக்கை
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்
-
சிறைச்சாலை முன் கார்களுக்கு தீ வைப்பு: பிரான்சில் மர்ம நபர்கள் தாக்குதல்