கூவத்தில் படர்ந்த ஆகாய தாமரை கொசு தொல்லை அதிகரிப்பு

மதுரவாயல்:வளசரவாக்கம் மண்டலம், மதுரவாயல் கூவம் ஆற்றில் ஆகாய தாமரை படர்ந்துள்ளது. ஆற்றையே மூடும் வகையில் படர்ந்துள்ள இந்த செடிகளால், நீர் பரப்புக்கு ஆக்சிஜன், சூரிய ஒளி செல்வது தடைபட்டு, நீர்வாழ் உயிரினங்கள், நன்மை தரும் செடிகள் அழியும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.

ஆகாய தாமரையின் இலைகளில் தேங்கி நிற்கும் தண்ணீரில், 'டெங்கு' உள்ளிட்ட கொசு பெருக்கம் அதிகமாக உள்ளது. இதனால், மதுரவாயல் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில், கொசுத் தொல்லை அதிகரித்துள்ளது.

மேலும், ஆகாய தாமரை படர்ந்துள்ளதாலும், குப்பை கொட்டப்படுவதாலும், கூவத்தில் நீரோட்டம் பாதிக்கப்பட்டு உள்ளது.

இதனால், ஆகாய தாமரையை அகற்ற, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement