பேக்கரி கடை பூட்டை உடைத்து திருடியவர் கைது

மதுரவாயல்,:சென்னை, ஆலப்பாக்கம், அய்யாவு நாயக்கர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார், 52.
இவர், ஆலப்பாக்கம், திருமுருகன் நகரில் ஸ்வீட்ஸ் மற்றும் பேக்கரி கடை நடத்தி வருகிறார்.
கடந்த 11 ம் தேதி இரவு கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார்.
மறுநாள் காலை வந்து பார்த்த போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. உள்ளே பெட்டியில் இருந்த பணம், மற்றும் கடையின் மேல் தங்கியிருந்த ஊழியரின் மொபைல் போன் ஆகியவை திருடு போயிருந்தது தெரிந்தது.
இது குறித்து சிவக்குமார் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். விசாரணையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த சதீஷ், 28. என்பவர் திருடியது தெரிந்தது. அவரை போலீசார் நேற்று கைது செய்தனர்.
அவரிடமிருந்து 4,700 ரூபாய், மொபைல் போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. சதீஷ் மீது ஏற்கனவே ஏழு குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
பெங்களூருவில் நடுரோட்டில் அப்படியே கவிழ்ந்த தண்ணீர் லாரி; பகீர் கிளப்பிய வீடியோ
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
-
மே 2ல் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
-
ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் மேல் நடவடிக்கை: அனுமதி வழங்கினார் கவர்னர்!
-
மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்: நெல்லை பள்ளியில் அதிர்ச்சி
-
மத்திய -மாநில அரசு உறவு பற்றி ஆராய உயர்நிலைக் குழு: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு
Advertisement
Advertisement