ஆமை வேகத்தில் மழை நீர் வடிகால் பணி 2 மாதமாக நெரிசலால் தவிக்கும் ஐ.சி.எப்.,

ஐ.சி.எப்.:அண்ணா நகர் மண்டலம், வில்லிவாக்கம் அருகில் ஐ.சி.எப்., பகுதி உள்ளது. இங்கு, வில்லிவாக்கத்தில் இருந்து, அயனாவரத்தை நோக்கி செல்லும் பிரதான பாதையான, ஐ.சி.எப்., பிரதான சாலை உள்ளது.
இச்சாலையின் நடுவே, கம்பர் அரங்கத்தின் அருகில், குறிப்பிட்ட துாரம் வரை மழைநீர் வடிகால் அமைக்கும் பணியை, கடந்த பிப்., முதல் வாரத்தில் மாநகராட்சி துவங்கியது. இதனால், 100 மீட்டருக்கு மேல் ஒரு வழிப்பாதையாக மாற்றப்பட்டுள்ளது.
சிறிய சாலையில் இருவழியாக செல்லும் வாகனங்களால், கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. தற்போது, புதிய சாலை அமைக்கும் பணிகள் மட்டுமே நிலுவையில் உள்ளன.
இது குறித்து, வாகன ஓட்டிகள் கூறுகையில், ''இரண்டு மாதமாக, ஐ.சி.எப்., பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கிறோம். தற்போது, 95 சதவீத பணிகள் நிறைவடைந்திருப்பதாக தெரிகிறது. மீதமுள்ள பணிகளை விரைந்து முடித்து, சாலையை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்.
மேலும்
-
நேபாளம், திபெத்தில் திடீர் நிலநடுக்கம்: கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் அச்சம்
-
பெங்களூருவில் நடுரோட்டில் அப்படியே கவிழ்ந்த தண்ணீர் லாரி; பகீர் கிளப்பிய வீடியோ
-
அமர்நாத் யாத்திரைக்கான முன்பதிவு தொடக்கம்; நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்கள்
-
மே 2ல் அ.தி.மு.க., செயற்குழுக் கூட்டம்
-
ராஜேந்திர பாலாஜி மீதான ஊழல் வழக்கில் மேல் நடவடிக்கை: அனுமதி வழங்கினார் கவர்னர்!
-
மாணவர், ஆசிரியரை அரிவாளால் வெட்டிய மாணவன்: நெல்லை பள்ளியில் அதிர்ச்சி