மா.அரங்கநாதன் இலக்கிய விருது தமிழவன், திருநாவுக்கரசு தேர்வு

சென்னை:இந்தாண்டுக்கான மா.அரங்கநாதன் இலக்கிய விருதுக்கு, பேராசிரியர் தமிழவன், ப.திருநாவுக்கரசு ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

இதுகுறித்து, முன்றில் இலக்கிய அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பு:

மறைந்த எழுத்தாளர் மா.அறங்கநாதனின் நினைவை போற்றும் வகையில், ஒவ்வொரு ஆண்டும் ஏப்., 16ம் தேதி, மா.அரங்கநாதன் இலக்கிய விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான விருதுகள், பேராசிரியர் தமிழவன், பதிப்பாளர் மற்றும் கட்டுரையாளர் ப.திருநாவுக்கரசு ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.

சென்னை, ராணி சீதை ஹாலில் நடக்கும் நிகழ்வில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. உச்சநீதிமன்ற நீதிபதி அரங்க.மகாதேவன், விருதுகளையும், தலா ஒரு லட்சம் ரூபாய் பரிசையும் வழங்க உள்ளார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement