மகாபோதி புத்த சங்கத்தில் பவுர்ணமி விழா கொண்டாட்டம்

தங்கவயல் : கவுதம் நகர், கர்நாடக அரசு போக்குவரத்துக் கழக டிப்போ அருகே உள்ள மகாபோதி அசோகா தம்ம பவுத்த சங்கத்தில் முழு நிலவு சிறப்பு தியானம் நேற்று நடந்தது.
சங்க தலைவர் புத்த தத்தா பந்தேஜி தலைமையில், பொதுச் செயலர் கேமின்டோ பந்தேஜி முன்னிலையில், புத்த பூஜை, திரிசரண, பஞ்ச சீல தியானம் நடந்தது. புத்த தத்தா பந்தேஜி பவுத்த அறநெறி பற்றியும், தம்மம் பற்றியும் விளக்கவுரையாற்றினார்.
பெமல் தொழிற் சாலையில் ஓய்வு பெற்ற ஆர்.பாலச்சந்திரன், ஜி.ஜெயப்பிரகாஷ் ஆகியோருக்கு பாராட்டு விழா நடந்தது. உரிகம் என்.டி., பிளாக் பகுதியில் வாணி நிலைய இலவச படிப்பகம் மற்றும் நுாலக உறுப்பினர் ஜி.ஜெயபிரகாஷின் சேவையை பாராட்டி, நுாலக பொதுச்செயலர் ஆர்.பிரபுராம், விருது வழங்கினார்.
பெமல் தொழிற்சாலை பொது மேலாளர் ஏ. திவாகரன், டாக்டர் பூர்னேசன் ராஜ், எம்.பிரதாப் குமார், புருஷோத்தமன் ஆகியோரும் பேசினர். ஆனந்தன், மணிமேகலை, செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.
மேலும்
-
அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி ஏன்: ஆடிட்டர் குருமூர்த்தி பேட்டி
-
போயிங் விமானங்களை வாங்க சீனா தடை
-
ஏப்.,17 ல் தமிழக அமைச்சரவை கூட்டம்
-
2025ல் கூடுதல் மழைப்பொழிவு: இந்திய வானிலை மையம் கணிப்பு
-
கற்பனை உலகில் வாழும் முதல்வர் ஸ்டாலின்; உயர்நிலைக் குழுவை விமர்சித்த அண்ணாமலை
-
பள்ளிக்குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்: முதல்வருக்கு நயினார் நாகேந்திரன் வலியுறுத்தல்