தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 சரிவு; ஒரு சவரன் ரூ. 70,040!

சென்னை: சென்னையில் தமிழ்ப்புத்தாண்டு தினமான இன்று (ஏப்ரல் 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 70,040க்கு விற்பனை ஆகிறது.
தமிழகத்தில் கடந்த வெள்ளிக் கிழமை, ஆபரண தங்கம் கிராம், 8,745 ரூபாய்க்கும், சவரன், 69,960 ரூபாய்க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் (சனிக்கிழமை), தங்கம் விலை கிராமுக்கு, 25 ரூபாய் உயர்ந்து, 8,770 ரூபாய்க்கு விற்பனையானது. சவரனுக்கு, 200 ரூபாய் அதிகரித்து, 70,160 ரூபாய்க்கு விற்கப்பட்டது.
நேற்று விடுமுறை தினம் என்பதால் தங்கம் விலையில் மாற்றமில்லை. இந்நிலையில் இன்று (ஏப்ரல் 14) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.120 குறைந்து ஒரு சவரன் ரூ. 70,040க்கு விற்பனை ஆகிறது.
கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் ரூ.8,755க்கு விற்பனை செய்யப்படுகிறது. தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் தங்கம் விலை சற்று குறைந்திருப்பது, நகைப்பிரியர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும்
-
பட்டா மாறுதலுக்கு ரூ.7 ஆயிரம் லஞ்சம்: கையும் களவுமாக சிக்கினார் வி.ஏ.ஓ.,!
-
'சாட்டை' துரைமுருகன் யுடியூப் சேனலுக்கும் நா.த.க.,வுக்கும் தொடர்பில்லை: சீமான்
-
பிரீமியர் லீக்: பஞ்சாப் அணி பேட்டிங்
-
நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்
-
காவல்துறை, நீதி வழங்கல் செயல்பாடு: டாப் 5 இடம் பிடித்த தென்மாநிலங்கள்
-
மேற்கு வங்க கலவரத்திற்கு காரணம் யார்: ஆரம்ப கட்ட விசாரணையில் பகீர் தகவல்