நேஷனல் ஹெரால்டு வழக்கு: சோனியா, ராகுல் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்

புதுடில்லி: 'நேஷனல் ஹெரால்டு' பணமோசடி வழக்கில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல் உள்ளிட்டோர் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது.
நேஷனல் ஹெரால்டு என்ற பத்திரிகையை, ஏ.ஜே.எல்., எனப்படும் 'அசோசியேட்டட் ஜர்னல்ஸ் லிமிடெட்' நிறுவனம் நடத்தி வந்தது. நிதி நெருக்கடியில் சிக்கிய இந்த நிறுவனத்தை, 50 லட்சம் ரூபாய்க்கு, 'யங் இந்தியன்ஸ்' நிறுவனம் வாங்கியது.
வழக்கு பதிவு
யங் இந்தியன்ஸ் நிறுவனத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா மற்றும் ராகுல் முக்கிய பங்குதாரர்களாக உள்ளனர். இதைத்தவிர, காங்கிரஸ் மூத்த தலைவர்களும் இதில் உள்ளனர்.
ஏ.ஜே.எல்., நிறுவனத்தின் பல கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை பறிக்கும் வகையில், இந்த பரிவர்த்தனை நடந்ததாக, பா.ஜ., மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி, 2014ல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை, டில்லியில் உள்ள பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றம் விசாரணைக்கு ஏற்றது.
இதனடிப்படையில், இதில் நடந்துள்ள பண மோசடி தொடர்பாக, அமலாக்கத் துறை, 2021ல் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறது.
இந்நிலையில், இந்த விவகாரத்தில் டில்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றத்தில் காங்கிரஸ் முன்னாள் தலைவர்கள் சோனியா, ராகுல், அக்கட்சியின் வெளிநாட்டு பிரிவு தலைவர் சாம் பிட்ரோடா, சுமன்துபே உள்ளிட்டோருக்கு எதிராக அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது. இதனைத் தொடர்ந்து இந்த வழக்கு விசாரணை ஏப்.,25ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.










மேலும்
-
ராமேஸ்வரம் ரிசார்ட்டில் ரூ.30 கோடி மதிப்புள்ள 60 அறைகளுக்கு சீல்; அமலாக்கத்துறை நடவடிக்கை
-
யுனெஸ்கோ சர்வதேச நினைவு பதிவேட்டில் பகவத் கீதை சேர்ப்பு; பிரதமர் மோடி பெருமிதம்
-
17 வயது சிறுவன் கத்தியால் குத்திக் கொலை: டில்லியில் பதட்டம்; பலத்த பாதுகாப்பு
-
6 நிமிடத்தில் அரும் பெரும் உயிர் பிழைத்தது; சினிமா பாணியில் செயல்பட்ட போலீசார்
-
பார்க்கிங்கில் நின்றிருந்த காரில் திடீர் தீவிபத்து; ஏ.சி.,யை ஆன் செய்த போது விபரீதம்
-
ஸ்டாலின் குடும்பத்துக்கு பலனளிக்கும் விண்வெளி தொழில் கொள்கை: அண்ணாமலை குற்றச்சாட்டு