காவல்துறை, நீதி வழங்கல் செயல்பாடு: டாப் 5 இடம் பிடித்த தென்மாநிலங்கள்

13

புதுடில்லி: காவல்துறை மற்றும் நீதி வழங்கல் செயல்பாட்டில் தென் மாநிலங்கள் முதல் 5 இடங்களை பிடித்துள்ளன. மேற்கு வங்கம் கடைசி இடத்தில் உள்ளதாக, இன்று வெளியிடப்பட்ட நீதித்துறை-2025-ன் நான்காவது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீதியின் நான்கு தூண்களான, காவல்துறை, சிறைச்சாலைகள், நீதித்துறை மற்றும் சட்ட உதவி மீதான மாநிலங்களின் செயல்திறன் தரவரிசைக்கு பரிசீலிக்கப்பட்டது. குற்றங்களை எதிர்த்துப் போராடுவதிலும், நீதி வழங்குவதிலும் மாநிலங்கள் எப்படி செயல்படுகின்றன என்பது குறித்து இதில் தெரிவிக்கப்பட்டுள்ளன.

2025-நீதித்துறை 4 வது அறிக்கை:

தென் மாநிலங்களான கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் தமிழ்நாடு ஆகியவை டாப் 5 இடம் பிடித்தன. மேற்கு வங்கம் கடைசி இடத்தை பிடித்துள்ளது.
ராஜஸ்தான், கேரளா, மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்கள் நீதித்துறை செயல்பாட்டில் முன்னேற்றம் கண்டுள்ளன.
சிறைத்துறை செயல்பாட்டில் ஜார்க்கண்ட், ஒடிசா மாநிலங்கள் முன்னேற்றம் கண்டுள்ளன.
சட்ட உதவி வழங்குவதில் சரியான மாநிலம் முன்னேற்றம் கண்டுள்ளது.


காவல்துறை மற்றும் நீதி வழங்கல் செயல்பாட்டில்,
ஏழு சிறிய மாநிலங்களில், சிக்கிம் சிறப்பாகச் செயல்பட்டது. கோவா பின்தங்கியுள்ளது.

இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement