சொத்துவரி பெயர் மாற்ற ரூ.20 ஆயிரம் லஞ்சம்: பேரூராட்சி ஊழியர்கள் கைது

6

நாகர்கோவில்: சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய ரூ.20 ஆயிரம் லஞ்சம் வாங்கிய ஊழியர்கள் இருவர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.


கன்னியாகுமரி மாவட்டம் பாகோடு பகுதியை சேர்ந்த தேவதாஸ் என்பவர், சொத்து வரி பெயர் மாற்றம் செய்ய பாகோடு பேரூராட்சியை அணுகினார். இதற்கு அங்கு பணியில் இருந்த ஊழியர்கள் இருவர் அவரிடம் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கேட்டனர்.


இதனை கொடுக்க விரும்பாத தேவதாஸ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார்.


அவர்கள் ஆலோசனைப்படி தேவதாஸ் ரூ.20 ஆயிரம் லஞ்சம் கொடுத்தார். அதனை வாங்கிய பேரூராட்சி பதிவு எழுத்தர் ஜஸ்டின் ஜெபராஜ் (38), எலக்ட்ரீஷியன் சுஜின்(37) ஆகியோர் லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி., சால்வின் துரை தலைமையிலான போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement