வளர்ச்சி பணிகள் குறித்து சபாநாயகர் ஆலோசனை

புதுச்சேரி : மணவெளி தொகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து, அதிகாரிகளுடன், சபாநாயகர் செல்வம் ஆலோசனை செய்தார்.

சட்டசபையில் உள்ள சபாநாயகர் அலுவகத்தில், நேற்று சபாநாயகர் செல்வம் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில், மணவெளி தொகுதி அபிஷேகப்பாக்கம் பகுதியில் மேற்கொள்ளப்பட வேண்டிய வளர்ச்சி பணிகள் குறித்து ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் இளங்கோவன், மேலாண் இயக்குனர் சிவக்குமார், பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ராதாகிருஷ்ணன், கல்வித்துறை இணை இயக்குனர் சிவகாமி, அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ், செயற் பொறியாளர் நாகராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Advertisement