வேலை செய்கிறது மோடி ட்ரீட்மென்ட்; தமிழில் மட்டுமே கையெழுத்து இட அரசாணை!

சென்னை: ''தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும் என்றும், அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்'' என்றும் அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இருந்து தனக்கு வரும் தலைவர்களின் கடிதங்களில் ஆங்கிலத்தில் கையெழுத்து இருப்பதாக பிரதமர் மோடி பேசி இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அனைத்து துறை செயலாளர்கள், கலெக்டர்களுக்கு தமிழக அரசு சுற்றறிக்கை ஒன்று அனுப்பி உள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
* தமிழில் மட்டுமே இனி அரசாணைகளை வெளியிட வேண்டும்.
* துறை தலைமை அலுவலகங்களில் இருந்து, பிற அலுவலகங்களுக்குச் செல்லும் கருத்துரைகளும் தமிழில் இருக்க வேண்டும்.
* பொதுமக்களிடம் இருந்து தமிழில் வரும் கடிதங்களுக்கு தமிழிலேயே பதிலளிக்க வேண்டும்; அரசு ஊழியர்கள் தமிழில் மட்டுமே கையெழுத்திட வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அண்மையில் தமிழகம் வந்த பிரதமர் மோடி, ராமேஸ்வரம் பாம்பன் ரயில் பாலம் திறப்பு விழாவில், ''எனக்கு சில தலைவர்கள் தமிழகத்தில் இருந்து கடிதம் எழுதுவது ஆங்கிலத்தில் இருக்கும்.
கையெழுத்து கூட ஆங்கிலத்தில் தான் போடுகின்றனர். தமிழ் மொழியில் போடக்கூடாதா என, நான் வியப்பதுண்டு'' என பேசியிருந்தது குறிப்பிடத்தக்கது.









மேலும்
-
மருத்துவமனையில் விமானப் பணிப்பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை: குருகிராமில் அதிர்ச்சி சம்பவம்
-
வக்ப் சட்டத்திற்கு எதிரான வழக்குகள்; மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் நோட்டீஸ்
-
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாகிறார் பிஆர் கவாய்
-
சீமானுக்கு எதிரான வழக்கு; வீடியோவை பார்த்து விட்டு உத்தரவு பிறப்பிக்க முடிவு
-
தி.மு.க.,வை வீழ்த்த கூட்டணிக்கு வாருங்கள்; சீமானுக்கு நயினார் நாகேந்திரன் அழைப்பு
-
வர்த்தக போர் தீவிரம்; சீன பொருட்களுக்கு 245 சதவீதம் வரி விதித்து டிரம்ப் அதிரடி