சூரமங்கலம் கோவிலில் இன்று கும்பாபிேஷகம்

நெட்டப்பாக்கம் : சூரமங்கலம் கிராமத்தில் உள்ள சித்தி விநாயகர், செல்வ விநாயகர், திரவுபதியம்மன், முத்தாலம்மன், வளையலம்மன், பாலதண்டாயுதபாணி, அய்யனாரப்பன், சப்தகன்னிகள், நாகராஜன், அய்யப்பன் கோவில்கள் புதுப்பிக்கப்பட்டு கும்பாபிேஷகம் விழா இன்று காலை 10.30 மணிக்கு நடக்கிறது.

இதையொட்டி நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு கணபதி ஹோமம், மாலை 5.30 மணிக்கு முதல்கால யாக பூஜை நடந்தது. நேற்று காலை 8.30 மணிக்கு இரண்டாம் கால யாக பூஜை, மாலை 5.30 மணிக்கு மூன்றாம் காலயாக பூஜை நடந்தது. இன்று காலை 5.30 மணிக்கு நான்காம் காலயாக பூஜையும், கடம் புறப்பாடு நடக்கிறது.

காலை 6.10 மணிக்கு சித்தி விநாயகர், 6.30 மணிக்கு வளையலம்மன், 7.10 மணிக்கு அய்யனாரப்பன், 9.15 மணிக்கு நாகராஜ கோவில், 9.30 மணிக்கு சப்தகன்னி கோவில், 9,45 மணிக்கு பாலதண்டாயுதபாணி கோவில், 10.10 மணிக்கு செல்வ விநாயகர், முத்தாலம்மன், திரவுபதியம்மன், அய்யப்பன் கோவில்களுக்கு கும்பாபிேஷகம் நடக்கிறது.

தொடர்ந்து 10.30 மணிக்கு மூலவர் அம்மனுக்கு கும்பாபி ேஷகம் நடக்கிறது. மாலை 6 மணிக்கு திருக்கல்யாணம் வைபவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.

Advertisement