பணிக் கொடை ஊதியத்தை வழங்க கோரி ஆர்ப்பாட்டம்

புதுச்சேரி : விற்பனைக்குழு பணி ஓய்வு பெற்ற ஊழியர்கள் சங்கம் சார்பில், பணிக் கொடை மற்றும் பணி ஓய்வு ஊதியத்தை வழங்க கோரி, கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

தட்டாஞ்சாவடி விற்பனைக்குழு செயலர் அலுவலகம் முன்பு நேற்று மாலை 4:00 மணியளவில், நடந்த கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், தலைவர் ராமமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ராமன், துணை தலைவர் ரகுநாதன், பொருளாளர் சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில், சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

விற்பனைக் குழுவில் பணிபுரிந்து ஓய்வு பெற்று 9 ஆண்டுகள் ஆகியும், 24 ஊழியர்களுக்கு பணிக் கொடை மற்றும் பணி ஓய்வு ஊதியத்தை வட்டியுடன் வழங்காத விற்பனைக்குழுவின் செயலரை கண்டித்து, ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Advertisement