வனப்பகுதியில் தங்கும் தனி நபர்கள்
ஸ்ரீவில்லிபுத்துார்,: ஸ்ரீவில்லிபுத்துார் செண்பகத்தோப்பு மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் தங்கும் தனி நபர்களால் வனத்தின் பாதுகாப்பு கேள்விக்குறியாகிறது.
இதனை தடுக்க போலீஸ், வனத்துறையினர் கண்காணிப்பு தீவிரமாக்க வேண்டுமென வனஉயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்துார் வனப்பகுதியான செண்பகத் தோப்பு, பந்த பாறை, ரெங்கர் தீர்த்தம் போன்ற மலை அடிவாரப் பகுதிகளில் இரவு நேரங்களில் தனி நபர்கள் மான், பல்வேறு வனவிலங்குகள் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இது தொடர்பாக அடிக்கடி பலர் வனத்துறையினரால் கைது செய்யப்பட்டு வருகின்றனர்.
கடந்த காலங்களில் மேற்கு தொடர்ச்சி மலை உச்சியில் அமைந்துள்ள முதலியார் ஊற்று பகுதியில் பல்வேறு தனி நபர்கள் தங்குவதும், அவர்களை வனத்துறையினர் பிடித்து கீழே இறக்கி விடும் சம்பவங்களும் நடந்துள்ளது.
இதுபோல் காட்டழகர் கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் சிலர் இரவு நேரங்களில் கோயில் பகுதியில் தங்குகின்றனர்.
மேலும் மழைக்காலங்களில் ஓடைகளில் நீர்வரத்து ஏற்படும்போதெல்லாம் ஏராளமானோர் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வனப்பகுதியில் சென்று குளித்து வருகின்றனர்.
இவ்வாறு பல தனி நபர்கள் எவ்வித கட்டுப்பாடும் இல்லாமல் வனப் பகுதிக்கு செல்வதும், இரவில் தங்குவதும் வனப்பாதுகாப்பை கேள்விக்குறியாக்கிவிடும்.
எனவே, செண்பகத் தோப்பு செல்லும் ரோடுகளில் போலீஸ் செக் போஸ்ட் அமைத்து 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டும்.
கூடுதல் வன ஊழியர்கள் நியமித்து மலையில் யாரேனும் தங்குகிறார்களா என்பதை வனத்துறையினர் கண்காணிப்பது மிகவும் அவசியமென வன உயிரின ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
மேலும்
-
ஆந்திராவில் வெறுங்கால்களுடன் நடந்த பெண்கள்: ஒரு கிராமத்துக்கே காலணிகளை அனுப்பிய பவன் கல்யாண்
-
சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு குறித்து ஜனநாயக விரோத சக்திகளை உலுக்கி உள்ளது; முதல்வர் ஸ்டாலின்
-
ஆயுதங்களை கீழே போடுங்கள்: நக்சல்களுக்கு அமித் ஷா எச்சரிக்கை
-
யுபிஐ பரிமாற்றத்திற்கு ஜிஎஸ்டியா மத்திய அரசு மறுப்பு
-
அடுத்த மாதம் விண்வெளி நிலையம் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா
-
பாதுகாப்புத்துறையில் ரூ.50 ஆயிரம் கோடி ஏற்றுமதிக்கு இலக்கு: ராஜ்நாத் சிங்