அடுத்த மாதம் விண்வெளி நிலையம் செல்கிறார் இந்திய வீரர் சுபான்ஷூ சுக்லா

3


புதுடில்லி: இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷூ சுக்லா வரும் மே மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு செல்ல உள்ளதாக மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.


இது தொடர்பாக அவர் கூறியதாவது: இந்திய விண்வெளி வீரருடன், சர்வதேச விண்வெளி பயணத்திற்கான திட்டம் அடுத்த மாதம் திட்டமிடப்பட்டு உள்ளது. விண்வெளி பயணத்தில் இந்தியா புதிய அத்தியாயத்தை எழுத தயாராக உள்ளது. இஸ்ரோ புதிய எல்லைகளை நிர்ணயித்துள்ள நிலையில், இந்திய விண்வெளி வீரர், வரலாற்று சிறப்பு மிக்க பயணத்திற்கு தயாராக உள்ளார். ககன்யான், சர்வதேச விண்வெளி திட்டம் என இஸ்ரோவில் இலக்குகள் உயர்ந்து கொண்டே செல்கிறது.

1984 ல் ராகேஷ் சர்மா விண்வெளி பயணத்திற்கு பிறகு, முதல் முறையாக விண்வெளி செல்லும் வீரர், சர்வதேச விண்வெளி மையத்திற்கு செல்லும் முதல் இந்திய வீரர் என்ற பெருமை சுபான்ஷூ சுக்லாவிற்கு கிடைக்கும். இந்தியா தனது அடுத்த விண்வெளி மைல்கல்லை எட்டத் தயாராக உள்ளது. இவ்வாறு ஜிதேந்திர சிங் கூறினார்.

Advertisement