டூவீலர் மோதி மூதாட்டி காயம்

ஆண்டிபட்டி : ஆண்டிபட்டி அருகே சக்கம்பட்டியை சேர்ந்தவர் மீனாட்சி 70, தனது மகன் மாரிமுத்துவுடன் தற்போது திருப்பூரில் வசித்து வருகிறார்.

இவரது மூத்த மகன் பாலசுப்ரமணியன் 44, சக்கம்பட்டி சுப்பு காலனியில் நெசவுத்தொழில் செய்து வருகிறார். பொங்கல் விழாவிற்காக திருப்பூரில் இருந்து மீனாட்சி சக்கம்பட்டி வந்துள்ளார். நேற்று முன் தினம் சக்கம்பட்டி மெயின் ரோட்டில் ஓரத்தில் நடந்து சென்றார்.

அவருக்கு எதிரில் வந்த அடையாளம் தெரியாத டூவீலர் மோதியதில் பலத்த காயம் அடைந்து தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். பாலசுப்ரமணியன் புகாரில் ஆண்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement