தமிழக காங். எம்.எல்.ஏ.வுக்கு 3 மாதம் சிறை: அதிகாரிகளை தாக்கிய வழக்கில் தீர்ப்பு

19

நாகர்கோவில்: தமிழக காங். எம்.எல்.ஏ.,வுக்கு 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது.


@1brதமிழக காங். சட்டமன்ற குழு உறுப்பினரும், கிள்ளியூர் எம்.எல்.ஏ.வுமாக இருப்பவர் ராஜேஷ் குமார்.


2014ம் ஆண்டு கன்னியாகுமரி மேற்கு பகுதியில் உள்ள மிடாலம் பகுதியில் உள்ள புறம்போக்கு நிலத்தை மீட்கச் சென்ற அதிகாரிகளை அவர் தடுத்தி நிறுத்தி தாக்கியதாக புகார் எழுந்தது.


இந்த சம்பவத்தில் ராஜேஷ்குமாருடன் சேர்த்து 6 பேர் மீது அப்போது வழக்கு பதிவு செய்யப்பட்டது.


இது தொடர்பான வழக்கு நாகர்கோவில் முதன்மை உதவி அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கில் 3 பேர் உயிரிழந்து விட, எஞ்சிய 3பேர் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை அளிக்கப்பட்டு உள்ளது.


அதன்படி, கிள்ளியூர் காங்.எம்.எல்.ஏ., ராஜேஷ்குமார் உள்பட 3 பேருக்கும் 3 மாதம் சிறை தண்டனை மற்றும் ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.

Advertisement