நீலகிரியில் 4 இடங்களில் மட்டுமே இ-பாஸ் சோதனை: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

ஊட்டி: நீலகிரியில் 4 இடங்களில் மட்டுமே இ பாஸ் சோதனை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
கோடை வாசஸ்தலமான ஊட்டி மற்றும் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகளுக்கு இ பாஸ் நடைமுறை ஏப்.1ம் தேதி முதல் கட்டாயமாக்கப்பட்டது. வார நாட்களில் 6000 வாகனங்களுக்கும், வார இறுதியில் 8000 வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டது.
இந்த நடைமுறையை ரத்து செய்ய கோரி வணிகர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பை பதிவு செய்து போராட்டத்திலும் இறங்கினர். தற்போது விடுமுறை காலம் தொடங்கி உள்ளதால் ஊட்டி முழுவதும் சுற்றுலா பயணிள் முகாமிட்டுள்ளனர்.
இந் நிலையில், நீலகிரியில் 4 சோதனைச்சாவடிகளில் மட்டுமே இ பாஸ் சோதனை நடைபெறும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. அதன்படி கல்லாறு, குஞ்சப்பனை, மசினகுடி, மேல் கூடலூர் ஆகிய 4 இடங்களில் மட்டுமே இபாஸ் நடைமுறை இருக்கும் என்றும், நீலகிரி மாவட்ட எல்லையில் உள்ள 14 சோதனைச் சாவடிகள் வழியாக வாகனங்கள் நுழைய அனுமதிக்கப்பட்டு வருகிறது என்றும் கூறி உள்ளது.
மேலும்
-
குஜராத் அணி அசத்தல் வெற்றி: சுப்மன் கில், சுதர்சன் அரைசதம்
-
ஜிம்பாப்வே அணி அபாரம்: வங்கதேச பவுலர்கள் ஏமாற்றம்
-
மீண்டும் செயற்கைக்கோள்களை விண்வெளியில் இணைத்த 'இஸ்ரோ'
-
கார்கே கூட்டத்தில் காலி இருக்கைகள்: காங்கிரஸ் மாவட்ட தலைவர் சஸ்பெண்ட்
-
நீலகிரியில் காட்டு யானை தாக்கி பெண் பலி!
-
தமிழகத்தின் பவித்ரா 'தங்கம்': தேசிய 'போல் வால்ட்' போட்டியில்