அருப்புக்கோட்டையில் சூறாவளி; 5,000 வாழை மரங்கள் சாய்ந்தன

அருப்புக்கோட்டை; விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் வீசிய பலத்த சூறாவளியால் 5ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தும், திருச்சுழி வடபாலை கிராமத்தில் மின்னலுக்கு 300க்கு மேற்பட்ட வாழை மரங்கள் தீப்பிடித்து எரிந்தும் சேதமடைந்தன.
அருப்புக்கோட்டை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை பலத்த சூறாவளியுடன் மழை பெய்தது. சிதம்பராபுரம் கிராமத்தில் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன. குலை தள்ளிய வாழை மரங்கள் அனைத்தும் சாய்ந்து விழுந்ததால் விவசாயிகள் விரக்தியில் உள்ளனர்.
சீனி, விவசாயி: சாய்ந்த மரங்களில் குலைகள் பிஞ்சாக இருப்பதால் யாரும் வாங்க மாட்டார்கள். முழுதும் நஷ்டமாகிவிட்டது அரசு உதவ வேண்டும் என்றார்.
திருச்சுழி அருகே வடபாலை கிராமத்தைச் சேர்ந்த லட்சுமணப்பெருமாளின் வாழை தோட்டத்தில் மின்னல் தாக்கியதில் 300 க்கும் மேற்பட்ட வாழை மரங்கள் தீப்பிடித்து எரிந்தன.
மேலும்
-
டில்லியில் பள்ளி இடைநிற்றலுக்கு தீர்வு; மாணவர்கள் வீடுகளுக்கு செல்லும் போலீசார்
-
பார்லிமென்ட்டுக்கே உயரதிகாரம்; துணை ஜனாதிபதி திட்டவட்டம்
-
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கணும்: ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு கவுதமி கண்டனம்
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; துவக்குகிறார் துணை ஜனாதிபதி
-
ஒரே பைக்கில் மாணவர்கள் 7 பேர் பயணம்: நடவடிக்கை பாயுமா?
-
சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு; ஜனநாயக படுகொலை என இ.பி.எஸ்., காட்டம்