அமைச்சர் பதவியில் இருந்து நீக்கணும்: ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு கவுதமி கண்டனம்

சென்னை: பெண்களையும், சைவம், வைணவத்தையும் இழிவாகப்பேசிய அமைச்சர் பொன்முடியை கண்டித்து, சேலம் மாவட்டம் ஆத்துாரில் நடந்த அ.தி.மு.க., ஆர்ப்பாட்டத்தில் நடிகை கவுதமி பேசினார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில், அமைச்சர் பொன்முடி பெண்களை இழிவாக பேசிய சம்பவத்தை கண்டித்து, அ.தி.மு.க., மாவட்டச் செயலாளர் இளங்கோவன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
ஆர்ப்பாட்டத்தில் அ.தி.மு.க.,வின் கொள்கை பரப்பு துணைச் செயலாளர் நடிகை கவுதமி பேசியதாவது: பெண்களை ஆபாசமாக பேசிய பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கம் செய்ய வேண்டும். டாஸ்மாக்கில் நடந்த ஊழல்கள் குறித்து விசாரிக்க வேண்டும்.
இவற்றை பொதுமக்கள் தேர்தல் நேரத்தில் மறந்துவிடக்கூடாது. தி.மு.க., ஆட்சி இனி தமிழகத்தில் எப்போதுமே வரக்கூடாது. 2026ம் ஆண்டு சட்டசபை தேர்தலில், அ.தி.மு.க., பொதுச் செயலாளர் இ.பி.எஸ்., முதல்வராக வருவதற்கு அனைவரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
மேலும்
-
குஜராத்தில் தனியார் பயிற்சி விமானம் வெடித்தது: விமானி பலி
-
சவுதியில் பிரதமர் மோடிக்கு சிறப்பான வரவேற்பு
-
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் சாதனை
-
காஷ்மீரில் சுற்றுலாப்பயணிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்: ஒருவர் பலி; 6 பேர் காயம்
-
போப் பிரான்சிஸ் இறுதிச் சடங்கு சனிக்கிழமை நடைபெறும்: வாடிகன் அறிவிப்பு
-
அமைச்சர் பொன்முடி மீது புகார்; கோர்ட்டில் அரசு தரப்பு அதிர்ச்சி தகவல்!