மனைவியுடன் வாழ விடாமல் தடுத்த மாமியார் கம்பியால் தாக்கி கொலை; மருமகன் கைது

ராமநாதபுரம்; ராமநாதபுரம் அருகே ஆர்.காவனுாரில் மனைவியுடன் வாழவிடாமல் தடுத்த மாமியாரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்த மருமகனை போலீசார் கைது செய்தனர்.

ஆர்.காவனுார் நடுத்தெரு முருகேசன் 53. இவரது மனைவி கனகு 48. இவர்களுக்கு சிவபார்வதி 28, சத்தியபார்வதி 25, ஆகிய மகள்கள் உள்ளனர். சிவபார்வதியை அப்பகுதியை சேர்ந்த நாகராஜன் மகன் அரசு பஸ் கண்டக்டர் மதன்குமாருக்கு 35, ஐந்தாண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொடுத்தனர்.

மதன்குமார் சிவபார்வதிக்கு இரு மகன்கள் உள்ளனர். சிவபார்வதியின் தங்கை சத்தியபார்வதி சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு சென்று மீண்டும் திரும்பினார்.

இதையறிந்த மதன்குமார் சத்தியபார்வதியை கண்டித்தார். இதன் காரணமாக மாமனார் முருகேசன், மாமியார் கனகு இடையே தகராறு ஏற்பட்டது.

தாய் தந்தையுடன் கணவர் மதன்குமார் தகராறு செய்ததால் சிவபார்வதி கோபித்துக் கொண்டு தாய் வீட்டிற்கு சென்று விட்டார். மதன்குமார் பலமுறை மனைவியை குடும்பம் நடத்த வருமாறு அழைத்தார். இதனால் மாமியார் கனகு மதன்குமாரை கண்டித்து அனுப்பியுள்ளார்.

மனைவி, குழந்தைகளுடன் வாழ்வதை மாமியார் கனகு தடுத்து வருவதாக கோபத்தில் இருந்தார் மதன்குமார்.

இரு நாட்களுக்கு முன்பு கனகு ஆர்.காவனுார் பஸ் ஸ்டாப் அருகில் அக்கா ராஜம்மாளுடன் பேசிக்கொண்டிருந்தார். அங்கு சென்ற மதன்குமார் கனகுவை இரும்பு கம்பியால் தாக்கினார்.

காயமடைந்த கனகுவை ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் அனுமதித்தனர். கனகு நேற்று இறந்தார். முருகேசன் புகாரில் பஜார் போலீசார் விசாரித்து மதன்குமாரை கைது செய்தனர்.

Advertisement