ஜி.எஸ்.டி., மோசடியில் ஈடுபட்ட 25,000 போலி நிறுவனங்கள்; ரூ.61,545 கோடி முறைகேடு கண்டுபிடிப்பு

புதுடில்லி: கடந்த நிதியாண்டில் மட்டும், 25,009 போலி நிறுவனங்கள், 61,545 கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரிப் பயன் மோசடி செய்துள்ளதை, மத்திய மற்றும் மாநில ஜி.எஸ்.டி., அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர். இதில், 1,924 கோடி ரூபாய் மீட்கப்பட்டு; 168 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கடந்த இரண்டு நிதியாண்டுகளில் மட்டும் 42,140 போலி நிறுவனங்கள் கண்டறியப்பட்டுள்ளதாகவும்; இவை 1.01 லட்சம் கோடி ரூபாய்க்கு உள்ளீட்டு வரிப் பயன் மோசடி செய்துள்ளதாகவும் அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதுவரை, இதில் 3,107 கோடி ரூபாய் மீட்கப்பட்டுள்ளது என்றும்; 216 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிறுவனங்கள் ஒரே பொருளுக்கு இரண்டு முறை வரி செலுத்தாமல் இருப்பதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது தான் ஐ.டி.சி., எனும் உள்ளீட்டு வரிப் பயன்.
இதன்படி, நிறுவனங்கள் மூலப் பொருள் வாங்கும்போது விற்பனையாளருக்கு செலுத்திய வரியை, இறுதியாக முழு உற்பத்திக்கு பிறகு செலுத்தும் வரியில் இருந்து கழித்துக் கொள்ளலாம்.
ஆனால், பல்வேறு நிறுவனங்களும் இதை தவறாக பயன்படுத்தும் வகையில், போலி நிறுவனங்களை உருவாக்கி, மோசடியில் ஈடுபட்டு வருகின்றன.













மேலும்
-
டில்லியில் பள்ளி இடைநிற்றலுக்கு தீர்வு; மாணவர்கள் வீடுகளுக்கு செல்லும் போலீசார்
-
பார்லிமென்ட்டுக்கே உயரதிகாரம்; துணை ஜனாதிபதி திட்டவட்டம்
-
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கணும்: ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு கவுதமி கண்டனம்
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; துவக்குகிறார் துணை ஜனாதிபதி
-
ஒரே பைக்கில் மாணவர்கள் 7 பேர் பயணம்: நடவடிக்கை பாயுமா?
-
சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு; ஜனநாயக படுகொலை என இ.பி.எஸ்., காட்டம்