நிதி நிறுத்தப்பட்ட விவகாரம்; டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலை வழக்கு

வாஷிங்டன்: நிதி உதவி நிறுத்தியது தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
அமெரிக்காவின் மாசாசூசெட்ஸ் மாகாணத்தில் ஹார்வர்டு பல்கலை உள்ளது. அமெரிக்க அதிபர் டிரம்பின் நிர்வாகம் இந்த பல்கலையில் உள்ள சமத்துவம் மற்றும் பன்முக திட்டங்களை நிறுத்தும்படியும், பேராசிரியர்களுக்கான அதிகாரத்தை குறைக்கவும் வழிகாட்டுதல்களை பிறப்பித்தது.
இதை ஏற்க மறுத்ததால், ஹார்வர்டு பல்கலைக்கு வழங்கப்பட்டு வந்த, 18,500 கோடி ரூபாய் நிதியுதவியை டிரம்ப் நிறுத்தினார். அதுமட்டுமின்றி வரி விதிப்போம் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்து பரபரப்பை கிளப்பினார். இந்நிலையில், நிதி உதவி நிறுத்தியது தொடர்பாக, டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது.
இது குறித்து ஹார்வர்ட் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: அரசாங்கம் தனது நிதி அதிகாரத்தை பயன்படுத்தி, ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த முடிவுகளை கட்டுப்படுத்த பார்க்கிறது. இது அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்திற்கு எதிரானது. இது கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் விதிமுறைகளையும் மீறுகிறது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.












மேலும்
-
டில்லியில் பள்ளி இடைநிற்றலுக்கு தீர்வு; மாணவர்கள் வீடுகளுக்கு செல்லும் போலீசார்
-
பார்லிமென்ட்டுக்கே உயரதிகாரம்; துணை ஜனாதிபதி திட்டவட்டம்
-
அமைச்சர் பதவியில் இருந்து நீக்கணும்: ஆபாச பேச்சு அமைச்சர் பொன்முடிக்கு கவுதமி கண்டனம்
-
ஊட்டியில் துணைவேந்தர்கள் மாநாடு; துவக்குகிறார் துணை ஜனாதிபதி
-
ஒரே பைக்கில் மாணவர்கள் 7 பேர் பயணம்: நடவடிக்கை பாயுமா?
-
சட்டசபையில் பேச அனுமதி மறுப்பு; ஜனநாயக படுகொலை என இ.பி.எஸ்., காட்டம்