ஜெய்ப்பூர் அரண்மனையை பார்த்து வியந்த அமெரிக்கா துணை அதிபர் வான்ஸ் குடும்பம்

ஜெய்ப்பூர்: ஜெய்ப்பூரின் ஆம்பர் கோட்டையை அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுப் பார்த்தார்.


இந்தியாவுக்கு 4 நாள் சுற்றுப்பயணமாக அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் குடும்பத்துடன் வந்துள்ளார். அவர் டில்லியில் நேற்று குடும்பத்துடன் சென்று பிரதமர் மோடியை சந்தித்தார். வான்ஸ் குழந்தைகளுடன் பிரதமர் மோடி கொஞ்சி விளையாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில், ஜெய்ப்பூரில் உள்ள பிரபலமான இடங்களான யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான ஆம்பர் கோட்டையை அமெரிக்கா துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், அவரது மனைவி உஷா வான்ஸ் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுப் பார்த்தார். அங்கு இருந்த பாரம்பரிய அடையாளங்களை பார்த்து வியந்தனர்.



நாளை (ஏப்ரல் 23) வான்ஸ் குடும்பத்தினர் ஆக்ராவுக்கு சென்று தாஜ்மஹால் மற்றும் ஷில்ப்கிராம் ஆகிய இடங்களை பார்வையிடுகிறார்கள். அன்று மாலை அவர்கள் ஜெய்ப்பூர் திரும்புகிறார்கள். ஏப்ரல் 24ம் தேதி வான்ஸ் குடும்பத்தினர் ஜெய்ப்பூரில் இருந்து அமெரிக்காவுக்கு புறப்படுகிறார்கள்.

Advertisement