யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழக மாணவர் சாதனை

7

புதுடில்லி: ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்., பணிகளை நிரப்புவதற்காக நடந்த யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், மாநில அளவில் முதலிடத்தையும் பிடித்து உள்ளார்.


ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ், ஐ.எப்.எஸ்., உள்ளிட்ட 24 விதமான பதவிகளுக்காக ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இதனை யுபிஎஸ்சி நடத்துகிறது.

கடந்த ஆண்டு ஜூலை மாதம் நடந்த முதல்நிலை தேர்வில் 6 லட்சத்திற்கும் மேற்பட்டோர் தேர்வு எழுதினர். இதில் 14,627 பேர் தேர்ச்சி பெற்றனர். இவர்களுக்கான முதன்மை தேர்வு செப்., மாதம் நடந்தது. இதனைத் தொடர்ந்து நேர்முகத் தேர்வு முடிந்த நிலையில், தேர்வு முடிவுகளை யுபிஎஸ்சி, தனது இணையதளத்தில் வெளியிட்டு உள்ளது.

Latest Tamil News
அதில் சக்தி துபே, ஹர்ஷிதா காயல், கோங்ரே அர்சித் பராக் ஆகியோர் முதல் மூன்று இடங்களை பிடித்து உள்ளனர்.


தமிழகத்தை சேர்ந்த சிவச்சந்திரன் தேசிய அளவில் 23வது இடத்தையும், தமிழக அளவில் முதல் இடத்தையும் பிடித்து உள்ளனர்.


தமிழ் வழியில் தேர்வு எழுதிய காமராஜ், சங்கர் பாண்டியராஜ் ஆகியோரும் இத்தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

58 வது இடம்



Latest Tamil News

சிவில் சர்வீஸ் தேர்வில் ராமநாதபுரத்தைச் சேர்ந்த கம்ப்யூட்டர் சென்டர் உரிமையாளர் ராம் பிரகாஷ் மகன் ஸ்ரீ ருசத் அகில இந்திய அளவில் 58வது இடத்தையும் தமிழகத்தில் மூன்றாவது இடத்தையும் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

முதல்வர் மகிழ்ச்சி





தமிழக மாணவர்கள் தேர்ச்சி தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட சமூக வலைதளப்பதிவில் கூறியுள்ளதாவது: எது மகிழ்ச்சி? நான் மட்டும் முதல்வன் அல்ல; தமிழகத்தில் உள்ள ஒவ்வொருவரும் முதல்வனாக என் பிறந்தநாளில் தொடங்கி வைத்த நான்முதல்வன் திட்டத்தில் பயிற்சி பெற்ற மாணவர் யுபிஎஸ்சி தேர்வில் தமிழகத் தரவரிசையில் முதல்வனாகியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது! பல்லாயிரக்கணக்கான மாணவர்களின் திறன்களை மேம்படுத்தும் இந்தத் திட்டம், வருங்காலங்களில் லட்சக்கணக்கானோரின் வாழ்வில் ஒளியேற்றிடும் என்ற நம்பிக்கை என் மகிழ்ச்சியாகியுள்ளது! இவ்வாறு அந்த பதிவில் முதல்வர் கூறியுள்ளார்.

Advertisement