எதிரியின் முகம் மாறியுள்ளது: எண்ணம் மாறவில்லை: முதல்வர் ஸ்டாலின்

22


சென்னை: '' நமது எதிரிகளின் முகம் மட்டும் தான் மாறி உள்ளது. அவர்களின் எண்ணமும், உள்ளமும் மாறவில்லை,'' என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.


சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: நீதிக் கட்சியின் தொடர்ச்சியான ஆட்சிதான் திமுக ஆட்சி. இங்கு இருப்பவர்கள் அனைவரும் வாரிசுகள். வாரிசு என்ற சொல்லை கேட்டாலே சிலருக்கு பற்றி எரிகிறது. அவர்களுக்கு எரியட்டும் என்பதற்காகதான் திரும்ப சொல்கிறோம். திராவிடத்தை ஒழிப்போம் என சில கைகூலிகள் பேசுவது போன்று, பிடி ராஜன் ஆட்சியில் நீதி கட்சியை குழிதோண்டி புதைப்போம் என ஒரு தலைவர் சொன்னார்.


மொழி போராட்டத்தின் போது, பிடி ராஜன் பேசும் போது, நாம் ஹிந்தி எதிர்ப்பாளர்கள் அல்ல. ஹிந்தியை திணிப்பவர்களின் எதிரானவர்கள். அவர் அன்று சொன்னதை இன்றும் நாம் சொல்லிக் கொண்டு இருக்கிறோம். டில்லியின் ஆதிக்க மனோபாவம் மாறவில்லை. நமது போராட்டமும் ஓயவில்லை. நமது எதிரியின் முகம் மாறி உள்ளது. அவர்களின் எண்ணமும் உள்ளமும் மாறவில்லை. அது மாறும் வரை நமது போராட்டம் ஓயாது தொடரும். இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.

Advertisement