காஷ்மீரில் அமித் ஷா உயர்மட்ட ஆலோசனை

4

ஸ்ரீநகர்: ''காஷ்மீர் பயங்கரவாத தாக்குதல் சம்பவம் குறித்து ஆய்வு செய்ய ஸ்ரீநகர் வந்தடைந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உயர் மட்ட ஆலோசனை நடத்தினார்.


காஷ்மீரில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து, பிரதமர் மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை தொலைபேசியில் அழைத்து சம்பவம் குறித்து கேட்டறிந்தார். மேலும் காஷ்மீர் சென்று நிலைமையை ஆய்வு செய்யும்படி கூறியிருந்தார்.


இதனையடுத்து உடனடியாக விமானம் மூலம் அமித்ஷா ஸ்ரீநகர் வந்தடைந்தார். அங்கு அவர் மாநில கவர்னர் மனோஜ் சின்ஹா, முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் ராணுவ உயர் அதிகாரிகள் , பாதுகாப்பு படையினருடன் உயர்மட்ட ஆலோசனை நடத்தினார். தாக்குதல் குறித்தும், அதற்கு காரணமானவர்கள் யார், பாதுகாப்பு ஏற்பாடுகள், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து இந்த கூட்டத்தில் விவாதிக்கப்படுமகிறது.

Advertisement