மாணவரை டிபன் பாக்ஸால் தாக்கிய பள்ளி ஆசிரியர் தலையில் காயம்

கீழக்கரை:ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே காஞ்சிரங்குடி ஊராட்சிக்குட்பட்ட லட்சுமிபுரத்தில் ஊராட்சி ஒன்றிய அரசு நடுநிலைப் பள்ளியில் நேற்று மதியம் மாணவரை டிபன் பாக்ஸால் ஆசிரியர் தாக்கியதில் தலையில் காயம் ஏற்பட்டது.

கீழக்கரை அருகே அலவாய்கரைவாடியைச் சேர்ந்த 6ம் வகுப்பு மாணவர்கள் கிருனேஷ் 11, முகினேஷ் 11. இரு மாணவர்களும் நேற்று மதியம் பள்ளி பாட நேரத்தில் பேசிக் கொண்டிருந்தனர். இந்நிலையில் பேசக்கூடாது என வகுப்பு ஆசிரியர் கிருஷ்ணகுமார் 45, கூறியுள்ளார்.

அதைக் கேட்காமல் இருவரும் பேசியதால் ஆத்திரமடைந்த ஆசிரியர் ஒரு மாணவரை கன்னத்தில் அறைந்ததில் அவருக்கு கன்னம் வீங்கியது. மற்றொரு மாணவர் மீது டிபன் பாக்ைஸ வீசியதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வழிந்தது. பள்ளி முடிந்து மாலை வீட்டிற்கு சென்ற மாணவர்கள் பெற்றோரிடம் கூறினர். கீழக்கரை அரசு மருத்துவமனையில் கிருனேஷூக்கு தையல் போட்டு டாக்டர்கள் சிகிச்சை அளித்தனர். பெற்றோர் அளித்த புகாரின் பேரில் கீழக்கரை போலீசார் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

Advertisement