சந்தன மரத்தை வெட்டி கடத்திய இருவர் கைது

அவிநாசி : சந்தனை மரத்தை வெட்டி கடத்தல் தொடர்பாக, 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

அவிநாசி, சேவூர் ரோடு, நாயக்கன் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் தியாகராஜன். இவரது வீட்டு தோட்டத்தில், சந்தன மரம் வளர்ந்திருந்தது.

கடந்த, 18ம் தேதி, இரவு சந்தன மரத்தை அடியோடு மர்ம நபர்கள் வெட்டி கடத்தினர். இதுகுறித்து அவிநாசி போலீசில், தியாகராஜன் புகார் அளித்தார்.

அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை செய்தனர். அதில், ஈரோடு மாவட்டம், தாளவாடி - சூசையாபுரம் பகுதியை சேர்ந்த பிரான்சிஸ் லுாயிஸ், 30, சகாயராஜ், 38, ஆகிய இருவரும் மரத்தை வெட்டி கடத்தி, சத்தியமங்கலம் - தாச கவுண்டம்புதுார், நரசபுரம் பகுதியை சேர்ந்த பொன்னுசாமி என்பவருக்கு விற்று உள்ளனர்.

இதனால், மூன்று பேரையும் அவிநாசி போலீசார் கைது செய்து, மாஜிஸ்திரேட் உத்தரவின்பேரில், கிளைச்சிறையில் அடைத்தனர்.

Advertisement