போலீஸ் டைரி

தொழிலாளி பலி



திருப்பூர் சாமுண்டிபுரத்தை சேர்ந்தவர் சிவனேசன், 32; பிரிண்டிங் தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மதுபோதையில் மில்லர் பஸ் ஸ்டாப் அருகே தள்ளுவண்டி கடையில் சாப்பிட சென்ற போது, எதிர்பாராத விதமாக சாக்கடை கால்வாயில் விழுந்து படுகாயமடைந்து இறந்தார். திருப்பூர் வடக்கு போலீசார் விசாரிக்கின்றனர்.

தீ வைத்தவர் கைது



திருப்பூர், அவிநாசி ரோட்டை சேர்ந்தவர் ராஜபெருமாள், 37. கடந்த, 14ம் தேதி இரவு வேலம்பாளையத்தில் நடத்தி வரும் பழைய இரும்பு கடையில் தீ விபத்து ஏற்பட்டது. உடனடியாக தீ அணைத்த காரணத்தால் சேதம் தவிர்க்கப்பட்டது. தொழில் போட்டி காரணமாக ராஜபெருமாள் தீ வைத்தது தெரிந்து, அவரை அனுப்பர்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

Advertisement