இரண்டாம் அவதாரம் எடுத்த ஸ்கோடா கோடியாக் எஸ்.யூ.வி.,

'ஸ்கோடா' நிறுவனம், 'கோடியாக்' எஸ்.யூ.வி., காரை இரண்டாம் தலைமுறைக்கு மேம்படுத்தி, அறிமுகம் செய்துள்ளது. இந்த காரின் முன்பதிவு துவங்கி உள்ள நிலையில், வினியோகம் மே 2 முதல் துவங்குகிறது. இரு மாடல்களில் வரும் இந்த காரின் விலை, தற்போது 8.70 லட்சம் ரூபாய் அதிகம். இதில், 7 பேர் வரை பயணிக்கலாம்.
இந்த காரின், 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல் இன்ஜின் மேம்படுத்தப்பட்டுள்ளதால், 14 ஹெச்.பி., கூடுதல் பவரை வெளிப்படுத்துகிறது. இந்த இன்ஜினுடன், 7 ஸ்பீடு 'டி.சி.டி.,' ஆட்டோ கியர்பாக்ஸ் மற்றும் 'ஆல் - வீல் டிரைவ்' அமைப்பு வருகின்றன.
ஆக்ரோஷமான 'ஹனி கோம்' கிரில், 'கனெக்டெட்' டி.ஆர்.எல்., லைட்டுகள், 'சி' வடிவ எல்.இ.டி., கனெக்டெட் டெயில் லைட்டுகள், புதிய 18 அங்குல அலாய் சக்கரங்கள், காரின் நீளம் 59 எம்.எம்., மற்றும் பூட் ஸ்பேஸ் 60 லிட்டர் அதிகரிப்பு, அகலம் 18 எம்.எம்., மற்றும் உயரம் 28 எம்.எம்., குறைப்பு ஆகியவை புதிய மாற்றங்கள்.
உட்புற கேபின் மற்றும் டேஷ்போர்டு புதிய டிசைனில் வந்துள்ளன. 13 அங்குல டச் ஸ்கிரீன் டிஸ்ப்ளே, 10 அங்குல ஓட்டுநர் டிஸ்ப்ளே, இரு ஸ்போக் ஸ்டீயரிங், இரண்டாம் வரிசை சீட்டுகளுக்கு 'ஸ்லைடிங்' மற்றும் 'ரிக்லைன்' வசதிகள், 3 ஜோன் ஆட்டோ ஏ.சி., 13 ஸ்பீக்கர் சவுண்ட் சிஸ்டம், மசாஜ் மற்றும் வெண்ட்டிலேட்டட் சீட்டுகள், பேனரோமிக் சன் ரூப், பவர்ட் டெயில்கேட், 360 டிகிரி கேமரா உள்ளிட்ட பல அம்சங்கள் இதில் உள்ளன.
பாதுகாப்புக்கு, 9 காற்று பைகள், அடாஸ் லெவல் 2 வசதி, ஏ.பி.எஸ்., இ.பி.டி., ஹில் ஹோல்டு அசிஸ்ட் மற்றும் டிசென்ட் கன்ட்ரோல் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன. கிரவுண்ட் கிளியரன்ஸ் 192 எம்.எம்., ஆக உள்ளது.
இன்ஜின் 2 லிட்டர், 4 சிலிண்டர், டர்போ பெட்ரோல்
பவர் 204 ஹெச்.பி.,
டார்க் 320 என்.எம்.,
மைலேஜ் 14.86 கி.மீ.,
பூட் ஸ்பேஸ் 340 லிட்டர்
மேலும்
-
அமைச்சர் பதவி வேண்டுமா? ஜாமின் வேண்டுமா: செந்தில் பாலாஜிக்கு சுப்ரீம் கோர்ட் கேள்வி
-
பயங்கரவாதிகளை தப்ப விடமாட்டோம்; காஷ்மீரில் முகாமிட்டுள்ள அமித்ஷா உறுதி
-
சுற்றுலாப் பயணிகள் 40 பேரை மீட்க சிறப்பு விமானம்: கர்நாடகா முதல்வர்
-
காஷ்மீர் தாக்குதல் பின்னணியில் லஷ்கர் இ தொய்பா அமைப்பு; உளவுத்துறை தகவல்
-
ஆபாச அமைச்சர் பொன்முடியின் பேச்சு: தாமாக முன்வந்து வழக்குப் பதிய உயர்நீதிமன்றம் உத்தரவு
-
நாட்டையே உலுக்கிய பஹல்காம் தாக்குதல்; பலியான 26 பேரின் பெயர்கள், ஊர் முழு பட்டியல் இதோ!